சிறிலங்காவில் சித்திரவதைகள் தொடர்கிறன – அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கை . March, 24 2019

news-details

உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறும் பொறிமுறை இன்னமும் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

சித்திரவதைகள், ஏனைய கொடூரமான மனிதத்தன்மையற்ற மோசமான நடத்தைகள் மற்றும் தண்டனைகள் சிறிலங்காவில் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், அதிகாரிகள் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்.